தொடங்கியது வடகிழக்கு பருவமழை…! தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காலை முதல் வெயிலின் தாக்கம் வழக்கம்போல் இருந்த நிலையில் மாலையில் கனமழை பெய்தது.

 

கோவில்பட்டி மட்டும் வெற்றியை கழுகுமலை எட்டயபுரம் குளம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியிலும் மாலை கனமழை பெய்தது. சில பகுதிகளில் மழை நீர் கழிவு நீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற காய்ச்சல் அபாயம் இருப்பதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.

 

திருப்பூர் மாவட்டம் ராயபுரம், கல்லாங்காடு, கருவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.


Leave a Reply