திருவாடானை அருகே மின்னல் தாக்கி பெண் பலி

திருவாடானை அருகே வயல் பகுதியில் கலை எடுத்துக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி பெண் பலியானார்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே ஊரணிக்கோட்டை கிராமத்தில் சூசை(62) என்பவரது வயலில் கலை எடுப்பதற்காக காலை தேவகோட்டை அருகே உள்ள தச்சவயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலை எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் தச்சவயல் கிராமத்தைச் சேர்ந்த மலர்(40) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அருகே களை எடுத்துக் கொண்டிருந்த சூசை இவரது மனைவி ரோசாலி(65) மற்றும் காளியம்மாள் என்பவர்களுக்கு லேசான காயம். இவரது கணவரும் விவசாய கூவி வேலை செய்து வருவதாக தெரிவித்தார்கள. சம்பவ இடத்திற்கு சென்ற திருவாடானை காவல் நிலையத்தார் வழக்கு பதிந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இது பற்றி விசாரித்து வருகிறார்கள்.


Leave a Reply