பிகில் ட்ரெய்லர் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புகழ் திரைப்படத்தின் டிரைலர் இன்று 6 மணியளவில் ரிலீசாக உள்ளது இதுகுறித்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக படத்தின் கிரியேட்டிவ் புரொடக்ஷன் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வாக்கெடுப்பை நடத்தியுள்ளார். நாளை வெளியாகும் பீகிள் ட்ரெய்லர் எத்தனை நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கும் என்று கூற வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தனர்..

அதற்கு பல கிட்டத்தட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள் பதில் கூறி இருந்தனர் அந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் அர்ச்சனா இன்று அதற்கான பதிலை ட்வீட் செய்துள்ளார். அதில் நேற்றைய வாக்கெடுப்பின் கிட்டத்தட்ட 24 சதவீதம் பேர் சரியாக கூறியதாகவும் படத்தின் டிரைலர் 2.30 நிமிடங்களுக்கு அதிகமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே பிகில் ட்ரெய்லரை பார்க்க ஆர்வமாக இருக்கக்கூடிய ரசிகர்களுக்கு இந்த செய்தி குஷிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.


Leave a Reply