ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வாகனங்களில் அடிபட்டு பட்டாம்பூச்சிகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினர் முன்வர வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறு குழந்தைகள் முதல் அனைவரும் ரசிக்கும் பட்டாம்பூச்சிகள் இயற்கை பாதுகாவலராக திகழ்கிறது.
தமிழகத்தில் ஓசி 13 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ள நிலையில் அவற்றை ஆஸ்திரேலியாவை பிறப்பிடமாகக் கொண்ட பட்டாம் பூச்சிகளை அதிகமுள்ளன ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே உப்பு காற்றுடன் ரம்மியமான சூழல் நிலவுவதால் மாலைநேரம் ஏராளமான பட்டாம்பூச்சிகள் இங்கு கட்டமைக்கின்றன. மகரந்த சேர்க்கைக்கு உதவும் பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறந்து திரியும் போது வாகனங்களில் அடிபட்டு உயிர் இழக்கின்றனர்.
இதனைக் கண்டு வேதனை அடையும் சுற்றுலாபயணிகள் சுற்றுச்சூழலை காக்கும் பட்டாம்பூச்சிகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதைத் தடுக்க வனத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரியுள்ளனர். மேலும் பாலத்தின் நுழைவு பகுதியில் வாகனங்களுக்கு வேககட்டுப்பாடு விதிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.