முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டு இன்றுடன் 124 வருடங்கள் முடிவடைந்த நிலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் பென்னி குயிக்கும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேனி திண்டுக்கல் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் நீர் தான்.
இந்த முல்லை பெரியாறு அணை கடந்த ஆயிரத்து 895 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி அன்றைய மெட்ராஸ் மாகாண கவர்னரால் திறக்கப்பட்டது. இது திறக்கப்பட்டு இன்றுடன் 174 வருடங்கள் முடிவடைந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை மீட்புக்குழுவினர் கூடலூர் மக்கள் மன்றத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் லோயர்கேம்ப் பகுதியில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மலர் தூவியும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் முல்லைப் பெரியாறு அணை மீட்புக்குழுவினர் மணிமண்டபம் முன்பாக பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.