போக்குவரத்து துறை முதன்மை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனை வருவாய்த் துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளராக பணியாற்றிய சத்யகோபால் அண்மையில் ஓய்வு பெற்றதையடுத்து போக்குவரத்து துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் சத்யகோபால் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணனின் போக்குவரத்து துறை செயலாளர் பொறுப்புக்கு எரிசக்தி துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் வைக்கப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு எரிசக்தி துறையின் செயலாளராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த விலை மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் சார் ஆட்சியராக இருந்த ரத்னாவை அரியலூர் ஆட்சியராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.