தீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான வரும் 26-ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் தீபாவளிக்கு முந்தைய தினம் பள்ளி கால அட்டவணைப்படி பணி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது 26 ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Leave a Reply