அரசுப் பேருந்தும், கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

சேலம் அயோத்தியாபட்டினம் புறவழி சாலையில் வேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து ஒன்று அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் மாணவிகள் உட்பட ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். அரசு பேருந்து உடன் தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாணவ மாணவிகள் உட்பட 35 பேர் காயமடைந்தனர்.

 

அயோத்தியாபட்டினம் அருகே ராமலிங்க புறத்திலுள்ள ஏவிஎஸ் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று சேலத்திலிருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. அயோத்தியாபட்டினம் பிரிவு சாலை அருகே சென்றபோது எதிரே வாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து அயோத்தியாபட்டினம் ஊருக்குள் சென்று திரும்புவதற்காக வலது பக்கமாக திரும்பி சாலையை கடக்க முயன்றது.

 

பாதி தூரம் கடந்த நிலையில் இடது பக்கமாக சாலையில் வேகமாக வந்த கல்லூரி பேருந்து அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியது இதில் அரசு பேருந்தின் பக்கவாட்டு பகுதி முழுவதும் கடும் சேதமடைந்தது இந்த விபத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் 5 பேரும் பேருந்து பயணிகள் 30 பேரும் காயமடைந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

 

அரசு பேருந்து சாலையை கடப்பதை கவனிக்காமல் கல்லூரி பேருந்து அதிவேகத்தில் வந்ததே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply