மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த காதல் கணவன்

மதுரை அலங்காநல்லூரில் ஆண் நண்பருடன் ஆன பழக்கத்தை கைவிட மறுத்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அபிநயா என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.

 

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி அபிநயா அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆண் நண்பருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து வந்ததால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்றும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

அப்போது நிதானம் இழந்த கணவன் மனைவி அபிநயாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இதையடுத்து உடலை அருகே உள்ள கிணற்றில் போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார் விசாரணை நடத்திய போலீசார் தப்பியோடிய கணவரை கைது செய்தனர்.


Leave a Reply