மதுரை அருகே நடிகர் அஜீத் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தங்கள் மகனுக்கு தல அஜித் என்று பெற்றோர் பெயர் வைத்து பள்ளியில் சேர்த்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மதுரை வீரர் ஜோதிலட்சுமி தம்பதி காதல் திருமணம் செய்துகொண்ட இருவரும் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர்களாக இருந்து வந்துள்ளனர்.
மேலும் தங்கள் மகனுக்கு அஜித் என பெயர் சூட்டி தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்த்துள்ளனர். இதுமட்டுமின்றி ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்திலும் தல அஜித் என்ற பெயரை இடம்பெற வைத்துள்ளனர். இந்த அடையாள அட்டையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன தனக்கு பிறந்த இரண்டாவது குழந்தையின் பெயரையும் நடிகர் அஜித்தின் பெயரை போல அஜித்தா என்று பெயர் சூட்டியுள்ளனர்.