பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெயகோபால் மேகநாதனின் ஜாமின் மனு மீதான விசாரணையை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ பேனர் விழுந்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இவர்கள் தொடர்ந்து ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு நீதிமன்றம் கடந்த நான்காம் தேதி தள்ளுபடி செய்தது .இதனையடுத்து அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். துரதிஷ்டவசமாக முறையிலேயே சுபஸ்ரீ உயிரிழந்ததாகவும் உள்நோக்கத்துடன் எந்த தவறும் செய்யவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இது விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதனை ஏற்று நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.