பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி !!!

சி.பி.எஸ்.சி க்ளஸ்டர் 6 என்ற பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி கோவை சுகுணா பள்ளியில் கோலாகலமாக துவங்கியது. கோவை காளப்பட்டியில் உள்ள நேரு நகரில் 2019- 2020 ஆம் கல்வி ஆண்டின் சி.பி.எஸ்.சி மாணவ, மாணவிகளுக்கான கிளஸ்டர் 6 என்ற கூடைப்பந்து போட்டி சுகுணா பள்ளியில் இன்று கோலாகலமாக துவங்கியது.14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

இந்த ஆண்டுக்கான கூடைப்பந்து போட்டி முதன் முறையாக கோவையில் துவங்கியுள்ளது.இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 128 பள்ளிகளிலிருந்து 263 அணிகள் கொண்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஐ.பி.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இத்நிகழ்ச்சியில் சுகுணா கல்வி குழுமத்தின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார், முதல்முறையாக இதுபோன்ற போட்டி நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும்,போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் வெற்றி பெற தனது வாழ்த்துக்களையும் சுஜித் குமார் தெரிவித்துக் கொண்டார்.


Leave a Reply