--- --:--:-- --

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் முக்கிய மாற்றம்?

4

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் தொடக்க விழா உசிலம்பட்டியிலிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற நிலையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

 

இந்த திட்டத்தை மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் வருகிற 28 ஆம் தேதி தொடங்கிவைப்பார் எனக் கூறப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய், தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாக தெரிவித்தார்.

 

 

மேலும் பயனாளர்களுக்கு வழங்க 1106 தங்க மோதிரங்கள் உசிலம்பட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு பெட்டகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த நிலையில் இடப்பற்றாக்குறை காரணமாக உசிலம்பட்டியில் இருந்து தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.

 

 

தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் உசிலம்பட்டியில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றலாமா? என ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதற்கேற்ற வகையில் அதிகாரிகள் மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்து, திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon