சைக்கிளைத் திருடும் சைக்கோ கொள்ளையன்
சென்னையில் உள்ள ஒரு பகுதியில் வீட்டிற்குள் புகுந்து சைக்கோ கொள்ளையன் ஒருவன் சைக்கிள் திருடன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் சாவகாசமாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளையன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சைக்கிளை திருடுகிறான். இதைப் போல் பல வீடுகளிலும் புகுந்து அங்குள்ள பொருட்களையும் அவன் திருடும் காட்சிகள் அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக உரிய ஆதாரங்களை கொடுத்தும் சைகோ கொள்ளையனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சைக்கோ கொள்ளையர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்ந்து அவர்களை விரைவில் பிடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




