திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காய்ச்சலால் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவன்மலையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் தேவி தம்பதியினரின் 6 வயது மகள் வர்ஷினி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து தொற்றுநோய் மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் பொருட்டு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது மேலும் நிலவேம்பு கசாயமும் அளிக்கப்படுகிறது.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!