பெண்களுக்கு அதிகாரமளித்து அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்

பெண்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். டெல்லி அருகே நடைபெற்ற தசரா பண்டிகை கீழ் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார் புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ராமாயணத்தில் நிகழ்ந்த இறுதி போர் காட்சிகள் அரங்கேற்றப்பட்டன.

 

இறுதியாக ராவணன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக இராவணனின் பிரம்மாண்ட சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பேசிய மோடி பெண்களிடம் கண்ணியத்துடனும் அவர்களுக்கு அதிகாரம் அளித்து இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வீணாக கூடாது எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார். டெல்லியில் நடைபெற்ற தசரா பண்டிகையில் குடியரசுத் தலைவர் துணைக் குடியரசுத் தலைவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்றனர்.

நவராத்திரியின் இறுதி நாளில் ராவணன் பல நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக டெல்லியில் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட ராவணனின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

டெல்லியில் ராம்லீலா கமிட்டியில் நடத்திய தசரா கொண்டாட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். இதே நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான மன்மோகன்சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்த ராவணனின் உருவச்சிலைக்கு வெங்கையாநாயுடு அம்பு எய்தி தகனம் செய்தார்.


Leave a Reply