இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

இயற்பியல் வேதியல் மருத்துவம் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மனிதகுலத்திற்கு அசாதாரண பங்களிப்பை வழங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் கழகம் மூலம் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

 

மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.. உடல் செல்கள் ஆக்சிஜனை எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக 3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படும் அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கனடாவை சேர்ந்த ஜேம்ஸ் பீ்பிள்ஸ் சுவிட்சர்லாந்தை சேர்ந்த டிடியர் குவலாஸ் மற்றும் மைக்கேல் மேயர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் ஜேம்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் அண்டவியல் தொடர்பாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார் பிரபஞ்சம் தொடர்பான கோட்பாடு குறித்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவர் ஆராய்ச்சி செய்ததாகவும் அதுதான் பெருவெடிப்பு முதல் தற்காலம் வரையிலான பிரபஞ்ச வரலாற்றின் நவீன புரிதலின் அடித்தளமாக உள்ளது எனவும் போற்றப்படுகிறது.

 

இதன் காரணமாக தற்போது அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. மற்ற இருவரும் 1995இல் சூரிய குடும்பத்திற்கு வெளியே முதல் கோளை கண்டுபிடித்தனர் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதையும் கண்டறிந்தனர். இதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


Leave a Reply