உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு நடனமாடும் விநோத வழிபாடு

கோவையில் விஜயதசமியை முன்னிட்டு குறிப்பிட்ட சமூக மக்கள் உடலில் கத்தியால் பற்றிக்கொண்டு நடனமாடும் வினோத வழிபாடு நடைபெற்றது. ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி கோவிலில் இந்த விழா நடைபெற்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தான் வேண்டியது நிறைவேறியவுடன் நன்றி செலுத்தும் விதமாக இவ்வாறு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலம் ஆர் எஸ் புரம் பகுதியில் துவங்கி ஒப்பணக்கார வீதி வழியாக சென்று மீண்டும் சவுடாம்பிகை அம்மன் கோவிலை அடைந்தது.


Leave a Reply