தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். நான் கடவுள், தவசி, நான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் தவசி திரைப்படத்தில் வடிவேலுவிடம் முகவரி கேட்பது போல் நடித்திருந்த காட்சி மிகவும் பிரபலம். இந்நிலையில் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கும் படத்திற்காக கிருஷ்ணமூர்த்தி குமுளி சென்றிருந்தார்.
விடுதியில் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி உயிர் பிரிந்தது. கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி வந்துள்ளார் சென்னை புரசைவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்திக்கு பிரசாந்த், கௌதம் என்ற 2 மகன்கள் உள்ளனர்.






