தேடப்படும் குற்றவாளிகள் பற்றி தகவல் தந்தால் 8 லட்சம் ரூபாய் சன்மானம்

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் குறித்து தகவல் தருவோருக்கு 8 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. கோவிலில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த வழக்கில் தேடப்படும் சாதிக் மற்றும் முஜிபுர் ரகுமான் அபூபக்கர் சித்திக் மற்றும் அசரஃப் அலி ஆகியோரது புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் இவர்களது புகைப்படம் அடங்கிய போஸ்டரை தமிழகம் முழுவதும் ஒட்டியுள்ள போலீசார் இவர்கள் தொடர்பான தகவல் தெரிவித்தால் 8 லட்சம் ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply