பிரதமர் நரேந்திரமோடி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு

4 நாள் அரசு முறை பயணமாக வியாழக்கிழமை இந்தியா வந்த வங்கதேச பிரதமர் டெல்லியில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் இருநாட்டு உறவுகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இஸ்லாமியர்கள் விவகாரம் நதிநீர் பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்தது.

 

இதையடுத்து இருநாடுகளிடையே துறைமுகங்கள் பயன்பாடு கல்வி கலாச்சாரம் பாதுகாப்பு வர்த்தகம் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின இருநாட்டு தலைவர்களும் முன்னிலையில் அந்த ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பின்னர் மூன்று முக்கிய திட்டங்களை மோடியும் ஹசீனாவும் சேர்ந்து துவக்கி வைத்தனர். அதில் ஒன்று எல்பிஜி நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் விற்பனை செய்யும் திட்டமாகும்.

 

திட்டங்களை துவக்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வங்கதேசம் இடையே மூன்று திட்டங்களை துவக்கி வைத்து இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக கூறினார். கடந்த ஓராண்டில் மட்டும் இரு நாடுகளிடையேயான 12 திட்டங்களை துவக்கி வைத்ததாக அவர் கூறினார். குழாய்கள் மூலம் எல்பிஜி எரிவாயு பெறும் திட்டம் குறித்து பேசிய மோடி சுற்றுச்சூழலுக்கு இது மிகவும் உகந்தது என்றும் செலவும் குறையும் எனவும் தெரிவித்தார் மோடியை தொடர்ந்து பேசிய ஷேக் ஹசீனா இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் 70 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி இருப்பதாக குறிப்பிட்டார். இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யும் எட்டாவது நாடாக வங்கதேசம் இருப்பதாகவும் அவர் கூறினார்.


Leave a Reply