முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிபுகுந்து உள்ளதாகவும் அதன் காரணமாகவே அனைத்து திட்டங்களையும் ஜெயலலிதாவை போல் அவர் செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கேடிசி நகரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திமுகவின் விளம்பரப் பதாகைகள் இன் தற்போது கருணாநிதியின் படமே இருப்பது இல்லை என தெரிவித்த அவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதியின் படம் மட்டுமே இருப்பதாக விமர்சித்தார். அப்பா மகன் என மன்னராட்சிக் இடம் அளிப்பது போல் திமுகவின் செயல்பாடு உள்ளதாகவும் அமைச்சர் ஆர் வி உதயகுமார் குற்றம்சாட்டினார்.