குடும்ப பிரச்னையால் 3 பெண் குழந்தைகளை கால்வாயில் தள்ளிக்கொன்ற தாய் கைது
கடலூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மூன்று பெண் குழந்தைகளை பெற்ற தாயே கால்வாயில் தூக்கி வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன நிலையில் மற்றொரு குழந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் சத்தியவதி தம்பதிக்கு மூன்று மகள்கள் இருந்தனர்.
மணிகண்டனுக்கு மது பழக்கம் இருந்ததாகவும் அதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வழக்கம் போல் சண்டையில் போது கணவருடன் கோபித்துக்கொண்டு மூன்று மகள்களையும் அழைத்துக் கொண்டு கீழமணக்குடி யில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சத்யவதி புறப்பட்டுள்ளார். பேருந்திலிருந்து இறங்கிய சத்தியவதி மகள்களுக்கு தின்பண்டம் வாங்கி கொடுத்துள்ளார்.

அதை தொடர்ந்து மூன்று மகள்களையும் கால்வாயில் தூக்கி பேசியதாக தெரிகிறது தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சத்தியவதியை கைது செய்தனர். கால்வாயில் வீசப்பட்ட மூன்று பேரில் 6 வயது அக்ஷயா 5 வயது நந்தினி ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு வயது சிறுமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தைகளை கால்வாயில் வீசிவிட்டு சத்தியவதி தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




