திருச்சி லலிதா ஜுவல்லரியில் 100 கிலோ நகை கொள்ளை…!

திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது/ இது குறித்து நகைக்கடை உரிமையாளர் கருத்து தெரிவித்துள்ளார்/ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தங்கம். பிளாட்டினம் மற்றும் வைரம் என 700 முதல் 800 நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட தாக தெரிவித்தார்.

 

மேலும் தப்பி ஓடிய கொள்ளையர்களை தனிப்படை போலீசார் விரைவில் கண்டுபிடித்து நகைகளை மீட்டு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.திருச்சி லலிதா ஜுவல்லரி யின் சுமார் 100 கிலோ வரை தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 7 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடையின் சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

இரவு பணியில் இருந்த ஆறு காவலாளிகளும் கடையின் முன்பக்கம் இருந்ததால் பின்புற பக்கவாட்டு சுவர் வழியாக கொள்ளையர்கள் நுழைந்தது அவர்களுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. அங்கு சிசிடிவி கேமராவை இல்லை. காலாண்டு விடுமுறை என்பதால் ஜோசப் பள்ளிக்கு பகல் நேரத்தில் கூட யாரும் வருவதில்லை. அதை பயன்படுத்தி கடையை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வழியாகவே வந்து கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

சுத்தியல், இரும்புக்கம்பி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கொள்ளையர்கள் சுவரை உடைத்து இருக்கலாம் என தெரிகிறது. இடத்தை நேரில் ஆய்வு செய்த திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் கொலை குறித்து விசாரணை நடத்தினார் பொம்மை முகமூடி அணிந்த இரண்டு பேர் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்து இருப்பது சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது.

 

அதிகாலை 2.11 மணி முதல் 4.28 வரை கொள்ளையர்கள் கடைக்குள் இருந்துள்ளனர். கைரேகை பதியாமல் இருக்க கையுறை அணிந்திருந்த கொள்ளையர்கள் மோப்பநாய் இடம் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் நகைகளை பைகளில் வைத்து அள்ளிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


Leave a Reply