விஜய் 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

விஜய் நடிக்கும் 64 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பிகில் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே மாநகரம் கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கி வருபவர். அவர் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி சாந்தனு மாளவிகா மோகன் ஆகியோர் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளனர்.

அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து சென்னை தரமணியில் பட பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று நடைபெற்ற பட பூஜையில் விஜய்யும் விஜய் சேதுபதியும் ஒன்றாக கலந்து கொண்டனர் படக்குழுவினர் அனைவரும் பட பூஜையில் பங்கேற்றனர். புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.


Leave a Reply