சிவகார்த்திகேயன் படத்திற்கு எழுந்த புதிய சிக்கல்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் தலைப்பு தங்களுக்கு சொந்தமானது என கூறி தயாரிப்பு நிறுவனம் ஒன்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கேஜிஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஹீரோ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் வேறொரு நிறுவனம் ஹீரோ படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

 

கடந்த 2014 ஆம் ஆண்டில் ஹீரோ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ததாகவும் தற்போது தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விதிமீறல்கள், ஹீரோ என்ற தலைப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுளது. கேசியர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கை மற்றும் கோட்பாடுகளை மீறி ஹீரோ என்று டைட்டிலில் தயாரிப்பதாகவும் வழக்கறிஞர் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply