தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த மின்வாரிய ஊழியர் ராஜா என்பவரின் வீட்டில் மதில் சுவர் ஏறி குதித்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடிப்பதற்காக 4 பேர் கொண்ட கும்பல் மேலாடையின்றி வருவது அங்கிருந்த சிசிடிவி யில் பதிவாகியுள்ளது.
கொள்ளை முயற்சியை கொள்ளையர்கள் இருவர் ரகசியமாகப் பேசிக் கொள்ளும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. ராஜா வீட்டில் கொள்ளையடிக்க முடியாததால் அந்த கும்பல் பக்கத்திலுள்ள விஜயா மற்றும் ராமையா என்பவர்களின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்று பலன் அளிக்காததால் தப்பியோடிவிட்டனர். கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து உள்ள போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.