போர் கப்பலில் வீரர்களுடன் சென்ற ராஜ்நாத் சிங்..!

எத்தகைய தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்திய கடற்படை தயாராக உள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மும்பை துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான விக்ரமாதித்யா போர்க் கப்பல் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.நேற்றைய தினத்தை கடற்படை வீரர்கள் உடன் செலவழித்த அவர் அதன்படி காலையில் வீரர்களுடன் யோகாவில் ஈடுபட்டார்.

 

பின்னர் கடற்படை தளங்களை பார்வையிட்டு அமைச்சர் ராஜ்நாத்சிங் போரின் போது பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் கடலை நோக்கி சுட்டு கடற்படை வீரர்களை உற்சாகமூட்டினார். அதனை தொடர்ந்து போர் கப்பலில் உள்ள மிக் 29 ரக போர் விமானங்களை இந்திய கடற்படையினர் நடத்திய சாகச காட்சிகளையும் கண்டு களித்தார். எதிர்கொள்ளும் விதம் குறித்து வீரர்கள் வானில் குண்டுகளை ஏவி இலக்கை துல்லியமாக சுட்டு காண்பித்தனர்.

 

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ராஜ்நாத்சிங் மேற்கு கடற்கரை வலிமையான கரங்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை ஒன்று விக்ரமாதித்யா ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள ராஜ்நாத்சிங் நாட்டை பாதுகாக்க இந்திய கடற்படை எப்பொழுதும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Leave a Reply