திருப்பூர் தென்னம்பாளையம், பூம்புகார் நகர் கிழக்குவீதி சேர்ந்த மனோஜ் (29) இவர் வீரபாண்டி மெயின்ரோட்டில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இங்கு மணி ட்ரான்ஸ்ஃபர் உள்ளிட்ட பணிகளும் செய்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் பத்து முப்பது மணி அளவில் வட மாநில வாலிபர் ஒருவர் மணி ட்ரான்ஸ்ஃபர் செய்யவேண்டும் எனக்கூறி மொபைல் கடைக்கு வந்துள்ளார். அப்போது அவர் கொண்டு வந்த 2000 ரூபாய் ரோட்டுக்கள் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டதாக உணர்ந்த மனோஜ்குமார் இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த சமீர் காண்டி( 28) என்பதும் இவர் தற்போது வீரபாண்டி மாகாளியம்மன் கோவில் பின்புறம் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி பனியன் கம்பெனியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும் அவரிடமிருந்த 2ஆயிரம் ருபாய் நோட்டுக்களை சோதனை செய்ததில் போலியான ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2000ரூபாய் நோட்டுக்கள் என்பதும் தெரியவந்தது இதனையடுத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சமீர் காண்டியை கைது செய்து அவரிடமிருந்து 7 போலியான 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.






