திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 15,வேலம்பாளையத்தை அடுத்த அம்மன் நகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக மின்கம்பம் ஒன்று பழுதாகி ஒடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இது தொடா்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பலமுறை வேலம்பாளையம் மின் வாரியத்திற்கு புகார் மனு அளித்தும் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரப்குதிகளில் பருவமழை பெய்துவரும் நிலையில் மிகவும் மோசமாக இருந்த அந்த மின்கம்பம் இன்று மாலை திடீரென இரண்டாக முறிந்து அந்தவழியாக ரோட்டில் வந்த சரக்கு லாரிமீது விழுந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் தலைதெறிக்க ஓடினர். இதனால் அப்குதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் அதிர்ஸ்டவகமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வேலம்பாளையம் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பல மணிநேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அம்மன் நகர்,ஆவினங்குடி பகுதிமுழுவதும் இரவு இருளில் மூழ்கியது. பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
குடியிருப்புகள் அதிகமுள்ள இப்பகுதியில் மின்கம்பம் முறிந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்து நடவடிக்கை எடுக்கமல் மெத்தனம் காட்டிய மின்வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.