தமிழிசை சௌந்தராஜனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகத்திற்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக பாஜக மாநில தலைவராக பணியாற்றி வந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கான ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து கடந்த எட்டாம் தேதி ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன் பின்னர் முதன்முறையாக ஹைதராபாத்தில் இருந்து இன்று சென்னைக்கு வந்த அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். இன்றும் நாளையும் தமிழகத்தை பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




