--- --:--:-- --

ஒரே நாளில் தலைகீழாக சரிந்தது தங்கம் விலை!

2

அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை குறைந்து வருகிறது. அதன் பிறகு படிப்படியாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.அந்த வகையில் நேற்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,195க்கும், ஒரு சவரன் ரூ.1,05,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

 

தொடர்ந்து மாத கடைசியான இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,040க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.10,670க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.85,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.210க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon