கூகுளுக்கு இன்று 21வது பிறந்தநாள்!

உலகின் முன்னணி தேடுபொறி யாக உள்ள கூகுள் இன்று தனது 21 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இணைய பயன்பாட்டில் முக்கிய பங்காற்றி வருவது கூகுள். இணையத்தில் எதை தேட வேண்டும் என்று ஆறுதலாய் வந்து நிற்பது கூகுள் தான் கூகுள் இல்லாமல் இணையத்தை பயன்படுத்தவே முடியாது என்ற நிலைமைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

 

அப்படிப்பட்ட கூகுள் இன்று தனது 21வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. 1998-ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டேட் போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 2 மாணவர்கள் இணைந்து இந்த கூகுள் தேடுபொறியை கண்டுபிடித்துள்ளனர். இதன் பிறந்த நாள் செப்டம்பர் 8 செப்டம்பர் 26 என மாறி மாறி கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இறுதியில் செப்டம்பர் 27ஆம் தேதி தான் பிறந்த நாள் என அறிவிக்கப்பட்டது. இன்று பிறந்தநாள் கொண்டாடுவதை எடுத்து கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.


Leave a Reply