--- --:--:-- --

தவெகவில் இணைந்த திமுக நிர்வாகிகள்..!

9

அன்னவாசல் திமுக நகர செயலாளர் முகமது ரிஷா, மாவட்ட மாணவரனி அமைப்பாளர் இளைய சூரியன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அக்கட்சியில் இணைந்தார்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் பேரூராட்சியில் திமுக நகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த அக்பர் அலியின் மகன் தற்போதைய திமுக நகர செயலாளர் முகமது ரிஷா மற்றும் அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலார் சந்திரன் அவர்களது மகனும், மாவட்ட மாணவரனி அமைப்பாளருமான இளைய சூரியன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகம்மது பர்வேஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

 

 

அவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர்.
திமுக நகர செயலாளர் முகமது ரிஷா மற்றும் மாவட்ட மாணவரனி அமைப்பாளர் இளையசூரியன் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது விராலிமலை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

மேலும், விரைவில் அப்பகுதியில் மாபெரும் இணைப்பு விழா ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த இணைப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon