2வது முறையாக மொட்டையடித்தபடி நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரும் அடுத்த மாதம் நான்காம் தேதி வழக்கறிஞர்களுடன் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தொலைபேசியில் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி தற்போது ஜாமினில் உள்ளார்.

 

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவி உதவிப் பேராசிரியர் முருகன் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிலா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று பேரும் அடுத்த மாதம் நான்காம் தேதி வழக்கறிஞர்களுடன் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். இதனிடையே வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக வேண்டி நிர்மலாதேவி இரண்டாவது முறையாக மொட்டை எடுத்தபடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.


Leave a Reply