இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில் யார் முதலிடம் தெரியுமா..

இந்திய அளவில் அதிகம் பேசப்படும் ஆண்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தை பெற்றுள்ளார். தோனிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் அதிகம் போற்றப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த கருத்துக்கணிப்பை யூகோ என்ற நிறுவனம் நடத்தியது. நாடுகள் வாரியாக வும் உலகம் வாரியாகவும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

 

இந்த பட்டியலில் இந்திய அளவில் அதிகம் பேசப்படும் ஆண்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 15.6 சதவீதம் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இருக்கும் தோனி 8.5 8% பெற்றிருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஏழாவது இடத்தில் உள்ளார். தோனியின் ஓய்வு குறித்து பலதரப்பினரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்தியர்களால் அதிகம் போற்றப்படும் பட்டியலில் மோடிக்கு அடுத்த இடத்தை தோனி பெற்றுள்ளார்.

 

அதேபோல் இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் பெண்கள் பட்டியலில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடத்தை பிடித்துள்ளார். உலக அளவில் அதிகம் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடத்தையும் பாரக் ஒபாமா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.


Leave a Reply