கோவை ரேஸ்கோர்ஸ்சில் பேப் – இண்டியா மைய தொடக்க விழா இன்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் ராசாமணி,நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன், மேற்கு மண்டல ஐ.ஜி பெரிய்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி மையத்தை தொடங்கி வைத்தனர். துவக்க விழாவில், பேப்- இண்டியா நிர்வாக இயக்குனர் வினய்சிங் கூறுகையில், பன்னோக்கு மையமாக விளங்கும் இதில், பல்வேறு சேவைகள், ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற வகையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
கோவையில் இது போன்ற மையத்தை துவக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதுபோன்ற மையங்கள், பிற நகரங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.கோவையில் இது 18 வது மையம். டில்லி, சண்டிகர், அம்ரிட்சர், ஹைதராபாத், சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, புனே மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் இதன் மையம் உள்ளது. இன்னும் பல நகரங்களில் இந்த மையங்களைத் துவக்க திட்டமிட்டு வருகிறோம்.
புதிய ஷாப்பிங் அனுபவம், பரிவர்த்தனை விபரங்கள், பிற கலந்துரையாடல் அனுபவங்களும் கிடைக்கும்.ஆயத்த ஆடைகள், ஆர்கானிக், வீடு மற்றும் தனிநபருக்கான ஆடைகள் இடம் பெற்றுள்ளன.
இங்கு பேப் கபே, உள் அலங்கார வடிவமைப்பு அரங்கு, ஆர்கானிக் நல மையம், மாற்றம் செய்வதற்கான ஸ்டுடியோ மற்றும் குழந்தைகளுக்கான பகுதி ஆகியவை உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு புதுமையான தனித்துவமிக்க அனுபவம் பெற இவை இடம் பெற்றுள்ளன.பேப் கபே, இந்திய உணவு வகைகள் நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய, நுண்ணுாட்டச்சத்து உணவுகள், மண்டல அளவிலான இந்திய பாரம்பரிய உணவுகள் இங்கு கிடைக்கும்.
இந்த மையத்தில் ஒரு இயற்கை நல மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் நலமுடன் வாழ தக்க ஆலோசனைகள் வழங்கவும், உடல்நலம் பேணவும் பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், ஆபீஸ், ரிசார்ட் போன்றவைகளை வடிவமைக்க பேப் – இண்டியா உள் அலங்கார ஸ்டுடியோ உள்ளது.குழந்தைகளுக்கான தனி மண்டலத்தை துவக்கியுள்ளது. குழந்தைகள் விளையாடவும், பொழுதுபோக்கவும் புதியவற்றை கண்டறியவும், உருவாக்கவும் இங்கு வாய்ப்புகள் உள்ளன.
கதை சொல்லுதல், பொம்மலாட்டம், ஓவியம் வரைதல், கைவினை பொருள் செய்தல், களிமண் மாடல், மறுசுழற்சி, தோட்டமிடுதல், ஆடல் பாடல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.பேப் – இண்டியா இந்தியாவில் 118 நகரங்களில் 315 ஸ்டோர்களை கொண்டுள்ளது. சர்வதேச அளவில் 14 ஸ்டோர்களை பேப்இன்டியா ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இயங்கி வருகிறது. பெரும்பாலான உடை தயாரிக்கும் கலைஞர்கள், கிராமப்புறங்களில் உள்ளனர்.
எங்களது நோக்கம், இந்திய கைவினை பொருட்களை, பாரம்பரிய வடிவமைப்புடன், வாடிக்கையாளர்களுக்கு இயற்கையான பொருட்களில் தயாரித்து வழங்க வேண்டும் என்பது தான்.ஆண்களுக்கு அதிக வகையான ஆயத்த ஆடைகள், பெண்கள், குழந்தைகள் முதல் வீட்டு உபயோகம் வரை, பரிசு பொருட்கள், நகைகள், இயற்கையான உணவு வகைள் போன்றவைகளை நியாயமான விலையில் தர வேண்டும் என்றார்.