புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆற்றில் குளத்தில் இன்று மூன்று மாணவர்கள் குளிக்க சென்றுள்ளனர். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் மாணவர்கள் அங்கு உள்ள சின்ன குலத்திற்கு சென்றுள்ளனர். ஜாக்சன் ஜான்சன் என்ற இரு மாணவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் சந்தோஷ் என்ற மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதாவது அந்த கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற போது ஆழமான பகுதிக்கு சென்றதாகவும் அந்த நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மாணவன் உயிரை காப்பாற்ற மருத்துவர் போராடி வருகின்றனர். அந்தப் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குளம் என்பதால் அந்த பக்கத்தில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த மூன்று சிறுவர்கள் மட்டுமே சம்பவம் நடக்கும்போது குளித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன் ஜாக்சன் என்ற சிறுவன் நீரில் மூழ்கி பார்த்து விட்டு மற்ற இரண்டு சிறுவர்களும் அவரை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது மூவருமே நீரில் மூழ்கியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பதற்கும் இரண்டு சிறுவர்கள் இறந்துவிட்டனர் சந்தோஷ் என்று சிறுவனை மட்டுமே கிராம மக்கள் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.