தண்டவாளத்தில் ஆய்வு பணியில் ஈடுப்பட்டிருந்த 2 பேர் ரயில் மோதி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் இருவரும் மீது ரயில் மோதியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்கிறது. இதன் மேற்பகுதியில் தற்போது இரும்பு மேம்பாலம் என்பது அமைக்கப்பட்டுள்ளது.
அந்த ரயில் மேம்பாலத்தில் தான் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. குறிப்பாக மூத்த பொறியாளர் தலைமையில் கேரளா கொல்லம் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் அதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெய்ஷ் சந்த்மீனா ஆகிய இருவர் இரும்பு ரயில்வே தண்டவாளத்தில் அதிர்வுகளை அளவிடும் பணி என்பது கடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு நடந்துகொண்டிருந்தது.
அப்போதுதான் மும்பையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் ஆனது திடீரென வந்தது. அப்போது அந்த ரயிலில் இரும்பு பாலத்தில் ஒருபுறமாக ஒதுங்கி நிற்க ஓடி சென்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே அந்த ரயில் திடீரென மோதி அந்த தாமிரபரணி ஆற்றில் மதுசூதனன் தூக்கி வீசப்பட்டார். மற்றொருவர் ரயில் தண்டவாளத்தில் உயிரிழந்தார்.
இதன் எதிரொலியாக கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் அதைப்பற்றி கன்னியாகுமரியிலிருந்து கோட்டையம் செல்லும் ரயில்கள் உட்பட கடந்த ஒரு மணி நேரமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு தற்போது அந்த அறையில் ஆனது மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




