பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் விசாரணையை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதவி ஆணையர்கள் விசாரிக்கும் வழக்கை கூடுதல் ஆணையர் கண்காணிக்கவும் உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
சென்னையில் பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ தொடர்பான 2 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான காவல் ஆணையர் விசாரணையை கண்காணிக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.