பேருந்து ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை என கூறி 500 ரூபாய் அபராதம்!

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் பேருந்து ஓட்டுநர் தலைக்கவசம் அணியாத இதற்காக பேருந்தின் உரிமையாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் சுமார் ஐம்பது பேருந்துகளையும் வைத்து தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் நிரஞ்சன் இவருக்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் பேருந்து இயற்றியதாக கூறி நிரஞ்சன் சிங்கிற்கு 500 ரூபாய் அபராதம் விதித்து ஆன்லைன் மூலம் ரசீது அனுப்பப்பட்டுள்ளது.

 

செப்டம்பர் 11 ஆம் தேதி இடைப்பட்ட ஆன்லைன் ரசீதை தனது ஊழியர் மூலம் நிரஞ்சன் உறுதி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தேவை ஏற்பட்டால் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து துறையின் அவல நிலையை இந்த ரசீது காட்டுவதாகவும் நாள்தோறும் விதிக்கப்படும் நூற்றுக்கணக்கான ஆதாரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே இந்த ரசீது போக்குவரத்து துறையால் வழங்கப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து காவலர்களால் வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply