--- --:--:-- --

மைக்ரோசாப்ட் அவுட்லுக், டீம்ஸ் சேவைகள் மீண்டும் சீரானது – உலகம் முழுவதும் பயனர்கள் நிம்மதி

5

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ் மற்றும் சில முக்கியமான சேவைகளில் ஏற்பட்ட உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் பிரச்சினையால் பல நாடுகளில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.

 

 

மின்னஞ்சல் அனுப்புதல், ஆன்லைன் கூட்டங்களில் பங்கேற்பது, கால அட்டவணைகளை நிர்வகிப்பது போன்ற அத்தியாவசியப் பணிகளைப் பயனர்களால் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியாவிலும் சில விமான நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவைகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சர்வர் தொடர்பான தொழில்நுட்பப் பிரச்சினையே இதற்குக் காரணம் என்றும், சைபர் தாக்குதல் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon