சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவருக்கு முதல்வர் நிதியுதவி
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை முதல் பாகத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் தீனா உயிரிழந்தது சிட்லபாக்கம் தில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக குறிப்பிட்டார்.

அவர்களது குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




