கிரிக்கெட் விளையாடிய போது பந்து தாக்கியதில் உயிரிழப்பு!

இந்திய கடற்படை கப்பலில் பணிபுரிந்த ராஜஸ்தானை சேர்ந்த வீரர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிய போது பந்து தாக்கியதில் உயிரிழந்தார். ஜோஹேந்திர சிங் என்பவர் தன்னுடன் பணிபுரிபவர்கள் உடன் இணைந்து நேற்று மாலை சென்னை துறைமுகம் ஐந்தாவது கேட் அருகே கிரிக்கெட் விளையாடினார். அப்போது ரப்பர் பந்து மார்பில் தாக்கியதில் மயக்கம் அடைந்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


Leave a Reply