மயங்கி விழுந்த முதியவருக்கு மாவட்ட ஆட்சியர் செஞ்சதை பாருங்க !

கரூரில் நடு ரோட்டில் மயங்கி விழுந்த முதியவரை தூக்கி சென்று அவரை ஆசுவாசப்படுத்த மாவட்ட ஆட்சியரின் மனிதநேயத்திற்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குடி மராமத்து பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் குளித்தலை டோல்கேட் வழியாக திரும்பிக் கொண்டிருந்தார்.

 

அப்போது எழுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையின் நடுவே மயங்கி விழுவதை கண்டார். உடனடியாக வாகனத்தை நிறுத்தி போக்குவரத்து போலீசாரின் உதவியோடு அருகிலுள்ள டீக்கடைக்கு முதியவரை தூக்கிச் சென்றுள்ளார். அங்கு அவரை அமர வைத்து அவருக்கு குடிநீருக்காக தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார். பின்னர் 108 அவசர ஊர்தி வரவழைத்து அவரை குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .

தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் என் செயலை பாராட்டிய ஆட்சியர் சம்பந்தப்பட்ட முதியவரின் குடும்ப நிலை குறித்து ஆய்வு செய்து தகவல் தெரிவிக்குமாறு குளித்தலை வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். முதியவருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி இருக்கும் பட்சத்தில் அவருக்கு ஆணை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவரின் மனித நேயத்திற்கு இந்த செயலுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Leave a Reply