--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை!

download (6)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் நள்ளிரவில் தொடங்கிய கனமழை விடிய விடிய வெளுத்து வாங்கியது.

 

நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வடபழனி, மயிலாப்பூர் உட்பட நகரின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் திணறினார். இதேபோன்று மடிப்பாக்கம், தாம்பரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. விடிய விடிய கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon