1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பலனளிக்குமா முதல்வரின் திட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் வெளியிட்ட மின்சார வாகன கொள்கையின் மூலம் தமிழகத்தில் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதோடு சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தை வெறும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் தேவையை உலகின் பல நாடுகளும் உணர்ந்திருக்கின்றனர்.

 

இந்தியாவிலும் மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் தொடர்ந்து அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இதை அறியும் பொருட்டு மத்திய அரசும் மின்சார வாகனங்களின் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்து இருந்தது தமிழகத்திலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் தனது அமெரிக்கப் பயணத்தின் போது டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலையை பார்வையிட்டு இருந்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

 

ஊர் திரும்பிய பிறகு தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டைக் ஊக்குவிப்பதற்காக 10 ஆண்டுகளுக்கான கொள்கைகளை வகுத்து வெளியிட்டிருக்கிறார். முதலமைச்சர் இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டின் இறுதிவரை 100% மோட்டார் வாகன வரி விலக்கு அளிக்கவும் 2030 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார மாணவர்களுக்கு மாநில ஜிஎஸ்டி 100% திரும்ப வழங்கவும் இந்த மின் கொள்கை வழிவகுத்துள்ளது மின்சார வாகனங்களுக்கு இந்த சலுகைகளை அறிவித்ததன் மூலம் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்களை அறிவுறுத்தும் அதேநேரத்தில் தமிழகத்தில் இயங்கும் சுமார் 21,000 அரசு பேருந்துகளுக்கு மாற்றாக ஆண்டுதோறும் 5 விழுக்காடு மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களில் மின் ஆட்டோக்களை அறிமுகம் செய்யும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளது.


Leave a Reply