பிளஸ் ஒன், பிளஸ் டூ பாடங்கள் 5-ஆக குறைப்பு

11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 600 க்கு பதிலாக 500 குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் 11ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் 6 பாடங்களுக்கு பதில் இனி ஐந்து பாடங்கள் இருக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு மொத்த மதிப்பெண்கள் 600 லிருந்து 500 ஆக குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

2020-2021 ஆம் கல்வி ஆண்டு முதல் மதிப்பெண்கள் மாற்றம் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித் துறை சார்பாக வந்திருக்கக்கூடிய அறிவிப்பின்படி 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி வந்துள்ளனர். அதுபோல ஆறு பாடங்கள் என்ற அடிப்படையில் அது இருந்தது.

 

இப்போது குறைக்கப்பட்டு மாணவர்கள் 6 பாடங்களுக்கு மட்டுமே எழுதக் கூடிய சூழல் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களைப் பொறுத்தவரையில் ஏற்கனவே இரண்டு தாள்கள் முறை இருந்தது தமிழ் ஒன்றும் தாள் இரண்டாம் தாள் போன்றவை இருந்ததை குறைத்து ஒரே தாளாக மாற்றம் செய்து பள்ளி கல்வித் துறை சார்பாக அறிவிப்பு வெளியாகியது. தற்போது மதிப்பெண்களும் பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply