பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அதிகாரி மீது சரமாரி தாக்குதல்

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கலால் துறை அதிகாரியை இரண்டு பெண்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வீட்டில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு கலால் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் திடீரென மோகன்லால் தன் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி அவரை தாக்க தொடங்கினார். இந்த விவகாரத்தில் தலையிட மாற்றி அதிகாரிகளுக்கு தைரியம் வரவில்லை. இந்த நிலையில் அங்கிருந்த அவர்களால் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் இணையதளத்தில் வைரலானது தொடர்ந்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply