உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலியாக ஸ்ரீஹரிகோட்டா பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தும் இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் மற்றும் உளவுத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் செயற்கைக் கோள் ஏவு தளத்தில் பயங்கரவாதிகளின் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் அந்த பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஸ்ரீஹரிகோட்டா ஒட்டியிருக்கும் கடல் பகுதியில் மீன் பிடிப்பு பகுதியில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடம் கடலோர காவல் துறையினர் விசாரணை செய்கின்றனர். மீனவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் .அங்கு கடலிலும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.